செல்கானின் புதிய போன்

செல்கானின் புதிய போன்
Updated on
1 min read

செல்கான் நிறுவனம் காம்பஸ் விஸ் Q42 எனும் புதிய போனை அறிமுகப்படுத்த இருப்பதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய போன் இரட்டை சிம் வசதியுடன், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் வர்ஷனைக் கொண்டிருக்கிறது. செல்கான் ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தப் புதிய போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

4ஜிபி ஸ்டோரேஜ், 32 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய வசதி, 5 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா , 3ஜி, வைஃபை உள்ளிட்ட அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பேட்டரி பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், விலை பற்றியோ அறிமுகத் தேதி பற்றியோ தகவல் இல்லை. வரும் நாள்களில் வெளியாகலாம்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in