

சமைக்கலாம் என்று சமையலறைக்கு செல்கிறீர்கள். நான்கு கேரட், மூன்று முட்டை, கொஞ்சம் மாவு இருக்கிறது. வழக்கமாக இல்லாமல் புதிதாக என்ன செய்யலாம்? இதோ உதவுகிறது ’பெர்ஃபெக்ட் பேக் ப்ரோ’. இந்தக் கருவியில் உங்கள் கைவசம் இருக்கும் உணவுப் பொருட்களை உள்ளீடு செய்தால் போதும்.
அந்தப் பொருட்களைக் கொண்டு என்னென்ன உணவுகளைத் தயாரிக்கலாம் என்று சொல்லிவிடும். இதனுடன் சில குவளைகளும் இணைப்பாக வருகின்றன.
நீங்கள் 50 எம்எல் தான் பால் ஊற்ற வேண்டும் என்ற நிலையில் சரியான அளவில்தான் ஊற்றுகிறோமா என்று பயந்து பயந்து ஊற்ற வேண்டாம். நீங்கள் இந்தக் குவளைகளில் ஊற்றும் போது தேவையான அளவை நெருங்கியதும் ‘போதும் போதும் நிறுத்துங்கள்’ என்று அதுவே உங்களுக்கு தெரிவித்துவிடும்.