

தற்போது உலகமே ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் மயமாக மாறிக்கொண்டு வருகிறது. கார் முதல் கழிப்பறை வரை எல்லாமே தானியங்கி சமாச்சாரம்தான். அதற்கான சமீபத்திய வியக்க வைக்கும் உதாரணம் ‘ஓரோ’ மின்விளக்குகள். இதனுடைய பயன்பாடு என்னவென்றால், நம்முடைய அப்போதைய தேவைக்கு ஏற்ப வெளிச்சங்களை உருவாக்கித் தரும்.
மங்கிய மாலைப் பொழுதில் நமது அறைக்குள் நுழையும்போது அதற்கேற்ற வெளிச்சத்தையும், நள்ளிரவு என்றால் அதற்கு தகுந்தாற்போல் வெளிச்சத்தையும் உருவாக்கி தரும்படி இந்த தானியங்கி மின் விளக்கு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அறைக்குள் நுழைவது, வெளியேறுவது முதற்கொண்டு அனைத்தையும் சென்சார் மூலம் உணர்ந்து அதற்கேற்ப இயங்கும் இந்த ஓரோ லைட். அதன் தானியங்கி தேர்வு தேவையில்லை என்றால் மேனுவலாகவும் நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.