தொழில்நுட்பம்
‘தீ’ காப்பாளன்
தீ விபத்தை தடுப்பது என்பது இன்னும் சவாலாகவே இருந்து வருகிறது. அது சார்ந்து தொடர்ந்து புதிய புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறான ஒன்றுதான் ’நெஸ்ட் ப்ரொக்ட்’ இந்தக் கருவியை வீட்டில் பொருத்திவிட்டால் போதும். இது வீட்டின் வெப்ப அளவை தொடர்ந்து கண்காணித்து வரும். வீட்டில் எங்காவது தீ பிடிப்பதற்கான அறிகுறி தென்பட்டுவிட்டால் அலறி அடித்து நமக்கு தகவல் தெரிவித்துவிடும்.
இப்போதுதான் வீடு முழுவது ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்து விட்டதே. அனைத்தையும் இந்தக் கருவியுடன் பொருத்திவிட்டால் போதும் எந்த அறையில் தீ என்று வெளிச்சம் போட்டுகாட்டி விடும்.
