லாலிபாப் 16

லாலிபாப் 16
Updated on
1 min read

ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 நெக்சஸ் சாதனங்களில் அறிமுகமாகியிருக்கிறது. பல புதிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் செய்யக்கூடிய 16 விஷயங்களை கிஸ்மோடோ உள்ளிட்ட தொழில்நுட்பத் தளங்கள் பட்டியலிட்டுள்ளன. இதில் செயலிகளை முன்னுரிமை கொடுத்து வகைப்படுத்தலாம்.

நோட்டிஃபிகேஷனை லாக் ஸ்கிரினில் இருந்தே கையாளலாம். உங்கள் சாதனத்தை மற்றவர்களிடம் கொடுக்க நேர்ந்தால் அவர்களை ஒரே செயலியில் பின் செய்யும் வசதியும் இருக்கிறது. அதே போல் லாக் ஸ்கிரினில் இருந்தே செயலிகள் செட்டிங்கிற்குத் தாவலாம். பேட்டரி சார்ஜ் எவ்வளவு மிச்சமிருக்கும் எனக் கணிக்கும் வசதியும் இருக்கிறது. சாதனத்தை விருந்தினர் மோடிற்கும் மாற்றிக்கொள்ளலாம். முழுப் பட்டியலையும் பார்க்க; >http://www.gizmodo.in/gadgets/16-Things-You-Can-Do-In-Android-Lollipop-That-You-Couldnt-Do-In-Kitkat/articleshow/45180894.cms

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in