

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றில் சிறந்த அறிமுகங்களைப் பட்டியலிடுவது சிக்கலானது. ஆனால், இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன்கள் பட்டியலை மார்குவஸ் பிரவுன்லீ(Marques Brownlee) வெளியிட்டுள்ளார். இவர் கேட்ஜட் பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர். யூடியூப் மூலம் புதிய கேட்ஜட்களை விமர்சனம் செய்து வருபவர். இவரது யூடியூப் சேனலுக்குச் சந்தாதாரர்களும், செல்வாக்கும் அதிகம்.
பிரவுன்லீ ஒரு குறும்பதிவில் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன்கள் எனத் தான் கருதுவதைக் குறிப்பிட்டுள்ளார். எச்டிசி. ஒன் எம்8, ஓன் பிளஸ் ஒன், ஐபோன் 6 பிளஸ் , சாம்சங் கேல்க்ஸி நோட் 4 மற்றும் நெக்சஸ் 6 ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவற்றை அவர் வரிசைப்படுத்தவில்லை. இவை எல்லாமே அளவில் பெரிய ஸ்மார்ட் போன்கள் என்பது தான் கவனிக்கத்தக்கது. பிரவுன்லியின் யூடியூப் சேனல்: >http://www.youtube.com/user/marquesbrownlee