

வயர் பொருந்தியிருக்கும் ஹெட்ஃபோன்களை வயர்லஸ் ப்ளூடூத் மூலம் வயர்லெஸ்ஸாக மாற்றும் புதிய கருவியை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ZEB-BE380T என்ற இயன்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் இணைப்பு, எந்தவகை இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனையும் வயர்லெஸ்ஸாக மாற்றும். வயர்லெஸ் ஆடியோ மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு, இந்த தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும். இது, 3.5mm ஜாக் உடன் வருவதால், இணைப்புடன் உங்கள் இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனை இணைத்தால் போதும், அவை முழுமையாக வயர்லெஸ்ஸாக மாறிவிடும்.
இந்த புளூடூத் கருவியில் மீடியா கட்டுப்பாட்டு பட்டன்கள் இணைக்கப்பட்டுள்ளதால், எளிதாக ஆடியோவை கட்டுப்படுத்தலாம். அத்துடன், MP3 பிளேபேக் வசதிக்காக மைக்ரோ SD ஸ்லாட் உள்ளது. இதிலுள்ள புளூடூத் அலைவரிசை, 10 மீட்டர் சுற்றளவுக்கு தடையில்லாமல் இயங்கக்கூடியது. அத்துடன் இதில் உள்ள கிளிப் வடிவமைப்பு, மிக எளிதாக புளூடூத் இணைப்பை ஏற்படுத்தி, தடையில்லாத ஹேண்ட்ஸ் ஃப்ரீ இசை அனுபவத்தை அளிக்கிறது.
இயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில், அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ.999.