

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் 15000 Mah ஆற்றல் கொண்ட தனது பாக்கெட் அளவுள்ள புதிய ‘ZEB MC15000D பவர் பேங்க்கினை’ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கைக்கு அடக்கமாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்கில் கூடுதலாக உள்ள எல்.இ.டி ஒளியுடைய டார்ச் வசதியும் உள்ளது.
டிஜிட்டல் எல்.இ.டி காட்சித்திரையின் உதவியால் சாதனத்தில் இன்னும் எவ்வளவு மின்சக்தி மீதமுள்ளது என்பதை சொல்ல முடியும். பேட்டரியின் சதவிகிதம் மட்டுமல்லாமல் இதன் டிஜிட்டல் காட்சித்திரை 1A அல்லது 2A என்கின்ற வெளிப்பாட்டின் நிலையையும் காண்பிக்கிறது. இது பவர் பேங்கினை மின்னூட்டம் செய்வதற்கு ஒரு மைக்ரோ USB உடன் வருகிறது, இதில் மின்னூட்டம் செய்வதற்கான அதிகபட்ச மின்சக்தி 2A ஆகும்.
மேலும் இதில் அதிக சார்ஜ் செய்யப்படுதல், குறைந்த வோல்டேஜ், மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனை போன்றவற்றுக்கு எதிரான பாதுகாப்பு அம்சமும் இருக்கிறது.
பெரும்பாலான சாதனங்களுடன் இணக்கமாக செயல்படக்கூடிய இந்த பவர் பேங்க் 1 ஆண்டு உத்திரவாதத்துடன் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணிக் கடைகளிலும் கிடைக்கிறது.கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் இது கிடைக்கும்.