புதிய அறிமுகங்கள்

புதிய அறிமுகங்கள்
Updated on
1 min read

ஸ்மார்ட் போன் சந்தையில் புதிய அறிமுகங்கள் தொடர்கின்றன. தைவானைச் சேர்ந்த எச்.டி.சி ஏற்கனவே இந்த ஆண்டு புதிய அறிமுகங்களைச் செய்துள்ள நிலையில், மேலும் இரண்டு அறிமுகங்கள் நிகழலாம் எனக் கூறப்படுகிறது. எச்டிசி டிசைர் 620 எனும் பெயரில் இரண்டு வடிவங்களில் இந்த போன் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனிடையே இந்திய நிறுவனமான ஐபால் 3 புதிய ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது.

அந்த வரிசையில் அறிமுகமாகும் இந்த போன்கள் ரூ,3,499, ரூ,4,699 மற்றும் ரூ. 6499 ஆகிய விலை கொண்டிருக்கும் என நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் எப்போது கிடைக்கத் தொடங்கும் எனும் தகவல் இல்லை. இதனிடையே கூகுள் நெக்சஸ் சாதனம் விரைவில் வரப்போகிறது என்னும் அறிவிப்புடன் பிளிப்கார்ட் தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ (Oppo ) நிறுவனம் தனது என்3 மற்றும் ஆர் 5 போன்களை டிசம்பர் முதல் விற்பனைக்குக் கொண்டு வரலாம் எனச் சொல்லப்படுகிறது. ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையை முக்கியமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. 4.85 மீமீ அகலம் கொண்ட ஒப்போ ஆர் 5 உலகின் மெல்லிய ஸ்மார்ட் போன் என்று நிறுவனம் சொல்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in