

நடைமுறை வாழ்க்கையில் செய்யும் பல விஷயங்களை இணையம் மூலம் இன்னும் எளிதாக செய்ய உதவும் இணையதளங்கள் பட்டியலில் நேம்பிக்கர்நிஞ்சா தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தளம், பல பெயர்களைக் கொண்ட பட்டியலிலிருந்து ஏதேனும் ஒரு பெயரைத் தேர்வுசெய்ய உதவுகிறது. அதாவது பெயர்களை எல்லாம் துண்டுச் சீட்டுகளில் எழுதிப்போட்டுக் குலுக்கல் நடத்தி ஒரு பெயரைத் தேர்வு செய்வோம் அல்லவா? அதுபோன்ற நேரத்தில் இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள பட்டியலில் பெயர்களை எல்லாம் வரிசையாகத் தட்டச்சு செய்து, ‘கோ’ எனும் கட்டளையை கிளிக் செய்தால், பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசையாக ஓடி, இறுதியில் ஒரு பெயர் மட்டும் முன்வைக்கப்படுகிறது.
இதைச் சீட்டு குலுக்கிப் போடப் பயன்படுத்தலாம். அதைவிடப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெயர்களை எழுதி, அடுத்த கேள்வி யாரிடம் கேட்பது எனத் தீர்மானிக்கப் பயன்படுத்தலாம். அடுத்த முறை அந்தப் பெயரை மட்டும் நீக்கிவிட்டுப் புதிதாகப் பயன்படுத்தலாம் அல்லது, அந்தப் பெயரையும் வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை பட்டியலைச் சுழலவிடலாம். கேள்விக்குப் பதில் சொல்ல, வகுப்பில் மாணவர் தலைவரைத் தேர்வு செய்யுவும்கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
எளிமையான இணையதளம்தான். ஆனால் சுவாரசியமானது.
இணைய முகவரி: >http://namepickerninja.com/index.html