

வெளியூர் பயணங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி கருவி. உடற்பயிற்சியை முடித்துவிட்டு மடக்கி வைத்துக் கொள்ளலாம். எடை குறைவானது. உடற்பயிற்சியை தவறாமல் செய்பவர்களுக்கு பயன்படும். உடற்பயிற்சிக்குத் தோதான வகையில் பல இடங்களில் பொருத்திக் கொள்ளவும் முடியும்.
புகை உருஞ்சும் கட்டிடம்
சீனாவின் பெய்ஜிங் நகரில் புகை மாசுவை சுத்தப்படுத்தும் கட்டிடத்தை உருவாக்கியுள்ளனர். புகை, தூசுகளை இந்த கட்டிடத்தில் உள்ள இயந்திரம் ஈர்த்து, காற்றை சுத்தப்படுத்தும் பணியை செய்யும். அடுத்ததாக காற்றை சுத்தப்படுத்தும் சைக்கிளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
லாக்கர் ஹப்
அமேசான் நிறுவனம் அடுக்குமாடி வீடுகளில் லாக்கர் ஹப் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. ஆர்டர் செய்த பொருட்களை இந்த லாக்கரில் வைத்துவிட்டு, பாஸ்வேர்டு அனுப்புவார்கள். வாடிக்கையாளர் எப்போது வேண்டுமானாலும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.