Published : 17 Jul 2017 11:20 AM
Last Updated : 17 Jul 2017 11:20 AM

பொருள் புதுசு: போர்ட்டபிள் புரொஜக்டர்

புரொஜக்டர் என்பது பெரிய அளவில் இருந்து வருவதால் அதை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம். இந்தக் குறையை போக்குவதற்காக கையடக்க புரொஜக்டர் சந்தைக்கு வந்துள்ளது. 100 அங்குல அளவுக்கு படத்தை காண்பிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்பி கம்ப்யூட்டர்

யுஎஸ்பி மாடலில் கையடக்க சிபியூவை இன்டெல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. 2ஜிபி ராம், 32ஜிபி நினைவக திறன் போன்ற வசதிகள் உள்ளன. இதை டிவி-யோடு இணைத்து செயல்படுத்த முடியும். மேலும் மெமரி கார்டு, வை-ஃபை வசதிகளும் உள்ளன

ஸ்மார்ட் தலையணை

ரெம் பிட் என்ற நிறுவனம் ஸ்மார்ட் தலையணையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தலையணையை உங்கள் ஸ்மார்ட் போனில் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம் நீங்கள் பாடல்கள் கேட்கமுடியும். இதனுள் மைக்ரோபோனும் உள்ளது.

ஸ்மெல்லிபோன்

நம் உடலில் இருந்து என்ன வாசனை வருகிறது என்பது நமக்குத் தெரியாது. சில நேரங்களில் நம் அருகில் இருப்பவரிடம் இருந்து வரும் நறுமணமும் நமக்குத் தெரிவதில்லை. அதைக் கண்டறியும் விதமாக ஒரு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. உடலில் என்ன வகையான வாசனை வருகிறது என்பதை இந்த கருவி நமக்கு சுட்டிக்காட்டும். அதாவது சிறிதாக துர்நாற்றம் நம் உடலில் அடித்தாலும் இந்தக் கருவி நமக்கு சொல்லிவிடும். இந்த கையடக்க கருவியை நமது ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.

சிறப்பு செயலி!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பார்வை இழந்தவர்களுக்காக புதிய செயலியை (ஆப்) உருவாக்கியுள்ளது. பார்வை இழந்தவர்கள் மொபைல் போனில் உள்ள படங்களை கண்டு கொள்வதில் சிரமம் ஏற்படும். ஆனால் இந்த அப்ளிகேஷன் மூலம் படங்களை பார்க்கும் போது அதற்கான விவரங்களை ஆடியோ வடிவிலும் பார்கோடு வடிவிலும் தருகிறது. இந்த அப்ளிகேஷன் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இதை பயன்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x