

வானிலையை அறிவதற்கு இன்னொரு செயலியைத் தரவிறக்கம் செய்ய நான் தயாரில்லை என நினைப்பவர்கள்கூட, டபிள்யூ.டி.எச்.ஆர். எனும் வானிலை செயலியைப் பார்த்தால் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், இந்தச் செயலி, அத்தனை எளிமையான முறையில் வானிலைத் தகவல்களை அளித்துக் கவர்கிறது.
ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, வானிலைத் தகவல்களை அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. திரையில் அன்றைய தினத்துக்கான வானிலைத் தகவல் இடம்பெறுகிறது, அவ்வளவுதான். கூடுதலாக வேறு எந்தத் தகவலும் கிடையாது.
மினிமலிசம் என்று சொல்லப்படும், தேவையான குறைந்தபட்சத் தகவல்களை மட்டுமே அளிக்கும் கோட்பாட்டுக்கு ஏற்ப இந்தச் செயலி வானிலை விவரங்களைக் கச்சிதமாக அளிக்கிறது. இந்தத் தகவல்களும் கையால் வரையப்பட்ட மேகச் சித்திரத்துடன், கையால் எழுதிய எழுத்துக்கள் மூலம் தெரிவிக்கப்படுவது இன்னும் சிறப்பு.
மேலும் தகவல்களுக்கு: >https://itunes.apple.com/app/id1252405260