மைக்ரோமேக்ஸ் போல்ட்

மைக்ரோமேக்ஸ் போல்ட்
Updated on
1 min read

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய போல்ட் AD4500 ஸ்மார்ட் போன் அறிமுகத்தைத் தனது இணையதளம் வாயிலாக அறிவித்துள்ளது. இதன் விலையை அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், இபே தளத்தில் 5,290 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாக கேட்ஜெட் சார்ந்த செய்தி தளங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் இரட்டை சிம் வசதி கொண்டுள்ளது. 4.5 இன்ச் டிஸ்பிளே, 1.3GHz டுயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் கொண்டுள்ளது. இரட்டை கேமரா வசதியும் இருக்கிறது. வை-பை மற்றும் ப்ளுடூத் 4.0 வசதியும் உண்டு. இதன் முன்பக்க இரட்டை ஸ்பீக்கர்கள் ஒலி பயனாளிகளை நோக்கி வருவது போன்ற உணர்வைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in