Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM

சாதி - மத மறுப்புத் திருமணங்களை செய்தவர்களுக்கு தனி இணையதளம்: குடியரசு தினத்தை முன்னிட்டு தொடக்கம்

நாட்டில் 65-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாதி மறுப்பு செய்தவர் களுக்கு ஆலோசனைகளையும் வழி காட்டுதல்களையும் சொல்வதற்காக பிரத்யேக இணைய தளம் (www.smartdivine.com) ஒன்று தொடங் கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், சாதி - மதம் கடந்து சிந்திக்க விரும்புகிறவர்கள் கைகோர்த்து இந்த இணைய தள தொடக்கத்துக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை மதுரையில் கால்கோள் விழா நடத்தினார்கள்.

இணைய தளம் தொடங்க உந்துதல் கொடுத்த `ஸ்பார்க் அறக்கட்டளை’யின் அறங்காவலர் மாரிக்குமாரும் இணையதள ஒருங் கிணைப்பாளரான `காந்திய சிந்தனை' கல்லூரி பேராசிரியர் பாண்டியனும் இந்த இணைய தளம் குறித்து ‘தி இந்து’விடம் பேசினர்.

“சாதி - மத மறுப்பு திருமணங்களை முடித்தவர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1990-களிலிருந்து இருக்கிறது. ஆனால், எல்லாமே கருத்தரங்கு பேச்சுகளோடு முடிந்துவிடுகிறது.

சாதி - மத மறுப்புத் திருமணங்களை முடிப்பவர்களின் பிரச்சினைகள், பிரச்சினைகளுக்கு தீர்வு, அவர்களுக் கான ஆலோசனைகள், அவர்களது குழந்தைகளுக்கான வழிகாட்டுதல்கள் இவைகளை வழங்குவதற்கு அமைப் புகள் இல்லை.

சாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொண்டவர்கள் தங்களது குழந்தைகளுக்கு என்ன அடை யாளம் போட்டுக்கொள்வது என்ற குழப்பம் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவில் இருக்கிறது.

இதனால் அநேக இடங்களில் அப்பாவின் சாதியை பிள்ளைக் கும் போட்டுவிடுகிறார்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்ததாகச் சொல்லிக் கொண்டு கடைசிவரை இருவரும் தங்களது சாதியை சொல்லிக் கொண்டே இருப் பதைத்தான் நிறைய இடங்களில் பார்க்கிறோம்.

இன்னும் பலர், ஒரு பக்கம் சாதி மறுப்பை பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் இடஒதுக் கீட்டு சலுகைகளை அடைவதற் காக பல தகிடுதத்தங்களை செய்கிறார்கள்.

சாதி - மதத்தை கடக்கவில்லை

எனவே, இதுவரை நடந்துள்ள சாதி - மத மறுப்பு திருமணங்கள் சாதி யையோ மதத்தையோ கடக்கவில்லை என்பதுதான் நிஜம்.

நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோம் என்று பெருமையடித்துக் கொள்வதற்காகவே இந்தத் திரு மணங்கள் பயன்பட்டிருக்கின்றன. இந்த அறியாமையை போக்கவும், ஒரு தெளிவையும் புரிதலையும் அதற்கான தகவல் பரிமாற்றத் தையும் உருவாக்கவே இந்த இணையதளம் தொடங்கப் பட்டிருக்கிறது.

சாதியை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது

சாதிவிட்டு சாதி திருமணம் செய்வது கலப்புத் திருமணம் என்று சிலர் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். தலித்துக்கும் பிற சாதிக்கும் நடக்கும் திருமணம்தான் கலப்புத் திருமணம். சலுகை வேண்டுபவர்களைத் தவிர மற்றவர்களை சாதியை குறிப்பிடும் படி கட்டாயப் படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே இருக்கிறது.

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது பிள்ளை களுக்கு சாதியே போடாதீர்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இதுபோன்ற இன்னும் பல புரட்சிகர மான மாற்றங்களை பெரிய அளவில் கொண்டு வருவதற்கான சிறிய ஆரம்பம்தான் இந்த இணையதள தொடக்கம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x