Last Updated : 06 Sep, 2016 12:52 PM

 

Published : 06 Sep 2016 12:52 PM
Last Updated : 06 Sep 2016 12:52 PM

தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் ஃபேஸ்புக்!

செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் கைகோத்து தன் பயனாளிகளுக்காக சில உத்திகளைக் கையாளவுள்ளது.

இதன்படி, ஃபேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும்.

தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

இதுகுறித்துப் பேசிய ஃபேஸ்புக்கின் ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கைகள் மேலாளர் ஜூலி டீ பெய்லியன்கோர்ட், ''மக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு தொடர்பில் இருக்க ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அவர்கள் துயரத்தில் இருக்கும்போது நண்பர்களையும், குடும்பத்தையும் அணுகுகிறோம். இதற்கு சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்த உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீதியான ஆதரவைத் தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x