

உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்லேண்டர் 10 வெற்றிகரமாக தனது சோதனை பயணத்தை முடித்துள்ளது. இந்த விமானத்துக்கு ஓடுதளம் தேவையில்லை. ஹெலிகாப்டரைப்போல அப்படியே மேலே எழுந்துவிடும்.
ஹீலியம் வாயுவால் மேலே எழும் இந்த விமானம் வானில் இரண்டு வாரங்கள்கூட மிதக்கும் திறன் கொண்டது.இரண்டு பைலட்டுகள் இந்த சோதனையை நடத்தினர். இது முழுவதும் பயன்பாட்டுக்கு வரும்போது உலகின் மிகப்பெரிய விமானமாக இருக்கும்.