வீடியோ புதிது: பூமியின் ஓராண்டுக் காட்சி

வீடியோ புதிது: பூமியின் ஓராண்டுக் காட்சி
Updated on
1 min read

பூமிப் பந்தைக் கொஞ்சம் தள்ளி நின்று, அதன் தோற்றத்தைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் புதிய வீடியோ இதைச் சாத்தியமாக்குகிறது. நாசா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், ஓராண்டில் பூமி எப்படியெல்லாம் காட்சி அளித்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் கிளைமேட் ஆப்சர்வேட்டரி' எனும் செயற்கைக்கோள் ஓராண்டாக எடுத்து அனுப்பிய ஒளிப்படங்கள்தான் இப்படித் தொகுக்கப்பட்டு ‘டைம்லாப்ஸ்' பாணியில் வீடியோவாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தச் செயற்கைக்கோள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பூமியின் தோற்றத்தைப் படம் எடுத்துள்ளது. இவ்வாறு பெறப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிப்படங்களை ஒன்றாகத் தைத்து வீடியோவாக உருவாக்கியுள்ளனர்.

இந்தப் படங்கள் மூலம் பூமியின் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும் என நம்புகின்றனர்.

பூமியின் வீடியோவைக் காண:>https://youtu.be/CFrP6QfbC2g

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in