

இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களின் வரிசையில் புதிய தளமாக அறிமுகமாகியிருக்கும் ‘டேபுக்’ தளம், பயனாளிகள் தாங்கள் செய்ய விரும்பும் பணிகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.
சுயமுன்னேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் செய்ய விரும்பும் செயல்களைக் குறித்து வைத்துக்கொண்டு அதை மறக்காமலிருக்க விரும்புவார்கள். இதற்கு உதவும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது ‘டேபுக்.கோ' இணையதளம்.
இந்தத் தளத்தில் வரிசையாகச் செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய திரைப்படங்கள், தினமும் ஓடுவது என இந்தப் பட்டியல் அமைந்துள்ளது. இவற்றை கிளிக் செய்து , நமக்கான குறிப்புகளை அதில் இணைக்கலாம்.
இந்த பட்டியல் தவிர பயனாளிகள் தாங்கள் விரும்பும் எந்தச் செயலை வேண்டுமானாலும் புதிதாகச் சேர்த்துக்கொண்டு அது தொடர்பான முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்துவரலாம்.
இணைய முகவரி: https://www.daybook.co/