செயலி புதிது: மனித உடல்கூறு அறிய உதவும் செயலி

செயலி புதிது: மனித உடல்கூறு அறிய உதவும் செயலி
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் செயலிகள் எல்லாமே பொழுதுபோக்கு ரகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? கற்றல் நோக்கில் உதவும் செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில் மனித உடற்கூறு பற்றி அறிந்துகொள்ள வழிகாட்டுகிறது ஹியூமன் அனாடமி அட்லஸ்.

மனித உடற்கூறு தொடர்பான பல படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்தச் செயலி மனித உடல் உறுப்புகளையும், அதன் தன்மையையும் முப்பரிமானத் தன்மையில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் உடற்கூறு அமைப்பில் 4,600 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் விவரங்களைப் பார்க்கலாம். மேலும் நுட்பமான விவரங்களும் இருக்கின்றன.

கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், கட்டணச் செயலி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: >http://www.visiblebody.com/index.html

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in