செயலி புதிது: பழக்கங்களைக் கற்றுத்தரும் செயலி

செயலி புதிது: பழக்கங்களைக் கற்றுத்தரும் செயலி
Updated on
1 min read

பழக்க வழக்கங்கள்தான் சாதனையாளர்களை உருவாக்குகின்றன என்கிறது ‘டைனிகெய்ன்’ செயலி. ஆண்ட்ராய்டு போன்களுக்கான இந்தச் செயலி, நீங்களும் இது போன்ற வெற்றிகரமான பழக்க வழக்கங்களை உருவாக்கிக்கொள்ள வழி செய்கிறது. மற்றவர்கள் பின்பற்றும் வெற்றிகரமான பழக்கங்களை அறிந்துகொண்டு பின்பற்றுவதோடு, பிரபலமானவர்களின் அதிகாலைப் பழக்கங்களையும் இதில் கற்றுக்கொள்ளலாம்.

அதிகாலைப் பழக்கங்களை மேலும் மேம்படுத்திக்கொள்வதற்கான குறிப்புகளையும் அளிக்கிறது. அதற்கேற்ப நன்றாகத் தூங்குவதற்கான வழிகளையும் முன்வைக்கிறது. உங்கள் வாழ்க்கையை மேலும் ரசிக்க, மேலும் மகிழ்ச்சியாக இருக்க இந்தக் குறிப்புகள் வழிகாட்டும் என இந்தச் செயலி தெரிவிக்கிறது. பணியிடத்தில் மேலும் கவனத்தை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தச் செயலியை நாடலாம்.

மேலும் விவரங்களுக்கு: >https://play.google.com/store/apps/details?id=com.ziggycrane.tinygain

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in