தளம் புதிது: ஸ்டார்ட் அப் துறைக்கான புத்தகப் பரிந்துரை

தளம் புதிது: ஸ்டார்ட் அப் துறைக்கான புத்தகப் பரிந்துரை
Updated on
1 min read

புதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்ள இணையத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அந்த வரிசையில் ‘புக்சலரேட்டர்' இணையதளம் ஸ்டார்ட் அப் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான புத்தகங்களைப் பரிந்துரைக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றித்தான் இப்போது இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல, விஸ்வரூப வெற்றி பெற்று மெகா நிறுவனங்களாகியிருப்பதால் ஸ்டார்ட் அப் துறை பரவலாகக் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், ஸ்டார்ட் அப் உலகில் வெற்றி பெறுவது எளிதல்ல. அதற்கு பயிற்சியும் உழைப்பும் தேவை.

ஸ்டார்ட் அப் துறை முன்னோடிகள் எழுதிய புத்தகங்களைப் படித்தும் ஊக்கம் பெறலாம். இதைத்தான் ‘புக்சலரேட்டர்' தளம் செய்கிறது. பரிந்துரைக்கான புத்தகத்தைத் தேர்வு செய்யப் புதுமையான முறையையும் இந்தத் தளம் பின்பற்றுகிறது. இணைய சேவை கண்டறிதல் தளமான ‘பிராடக்ட் ஹன்ட்' தளத்தில் பெற்ற வாக்குகள் மற்றும் ‘அமேசான்' மற்றும் ‘குட்ரீட்ஸ்' தளத்தில் புத்தகங்களுக்கான ஆதரவு அடிப்படையில் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தேவைப்படும் நேரமும் குறிப்பிடப்படுகிறது. வழக்கமான பாணியில் புத்தகத்தின் அட்டைப்படம் இடம் பெறாமல், வண்ணக் கட்டங்களில் புத்தகத் தலைப்பு மற்றும் அதன் நூலாசிரியர் பெயர் மட்டும் முன்வைக்கப்படுகிறது.

புத்தகங்களைத் தேட‌: >https://bookcelerator.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in