தள‌ம் புதிது: எதையும் கற்றுக்கொள்ள...

தள‌ம் புதிது: எதையும் கற்றுக்கொள்ள...
Updated on
1 min read

கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இணையம் இருப்பதை நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் தொட‌ங்கி, இணையக் கற்றலுக்கான பிரத்யேகத் தளங்களான ‘கான் அகாடமி’, ‘கோர்சரா’ எனப் பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவை தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் ‘ஹவ் காஸ்ட்’ இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தத் தளம், வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது ‘எவற்றை எப்படிச் செய்வது?’ என வழிகாட்டும் வீடியோக்கள் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் ஒளிப்படக் கலை, நடன வகுப்புகள், உணவு, ஆரோக்கியம், உள் அலங்காரம் என எண்ணற்ற தலைப்புகளில் வழிகாட்டி வீடியோக்கள் பட்டியலிப்பட்டுள்ளன. அவரவர் தத்தமது ஆர்வத்திற்கு ஏற்ற தலைப்புகளைத் தேர்வு செய்து அதில் உள்ள வீடியோக்களைக் காணலாம்.

இணையதள முகவரி: >http://www.howcast.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in