

ஸ்மார்ட் ஃபோன் கையில் இருந்தால் ஒளிப்படங்களை இஷ்டம்போல எடுத்துத் தள்ளலாம் என்றாலும், ஒளிப்படக் கலை தொடர்பான அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கும் இப்படி ஒளிப்படக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் ‘லேர்ன் போட்டோகிராபி’ என்ற செயலி உதவியாக இருக்கும்.
ஒளிப்படம் எடுக்கும் கலை தொடர்பான பாலபாடத்தில் தொடங்கி, கேமரா வகைகள், லென்ஸ் செயல்முறை எனப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள இந்தச் செயலி உதவுகிறது. ஒளிப்படக் கலையின் அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொள்வதோடு ஒளிப்படக் கலை நுட்பங்களையும் கற்றுக்கொள்ளலாம். ஒளிப்பட வகைகளுக்கான தனிப் பகுதியும் இருக்கிறது. கேமராக்களைத் தேர்வுசெய்யவும் கற்றுக்கொள்ளலாம். அதே போல ஒளி அமைப்பு கள் பற்றிய நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: >http://bit.ly/2rUs7nm