இவர் இன்ஸ்டாகிராம் அம்மா

இவர் இன்ஸ்டாகிராம் அம்மா
Updated on
1 min read

ஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் என்றால் போலந்து பெண்மணி அன்னா ரோஸ்வாட்ஸ்காவின் (>https://www.instagram.com/kreatywniezakrecona/ ) இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்கள் பின்தொடரலாம்.

இந்தப் பக்கத்தில் தனது இரண்டு குழந்தைகளின் ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொண்டுவருகிறார். எல்லாம் அவரே எடுத்த புகைப்படங்கள் என்பது மட்டும் அல்ல விஷயம். அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட விதம்தான் கவனிக்க வேண்டியது.

ஆம், அன்னா, பலவகையான காஸ்டியூம்களைத் தயார் செய்து அவற்றைத் தனது குழந்தைகளை அணிய வைத்து அந்த போஸ்களைப் படம் பிடிக்கிறார். ஹாரிபார்ட்டரில் தொடங்கி பலவகையான கதாபாத்திரங்களில் தனது குழந்தைகளை அவர் படம் பிடித்துப் பகிர்ந்துகொள்கிறார்.

இதற்காக அழகான இடங்களைத் தேர்வு செய்து படம் எடுக்கிறார். எழில் கொஞ்சும் பின்னணியில் மழலைகள் குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்துடன் போஸ் கொடுக்கும் காட்சி நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in