செயலி புதிது: ஒலிகளைக் கேட்க...

செயலி புதிது: ஒலிகளைக் கேட்க...
Updated on
1 min read

இசை கேட்பது மன அமைதிக்கு உதவுவது போலவே, விருப்பமான ஒலிகளைப் பின்னணில் கேட்டுக்கொண்டிருப்பதும் மனநிலை மேம்பட உதவும். மழை பெய்துகொண்டிருக்கும் ஓசை, காற்று வீசும் ஒலி ஆகியவற்றைப் பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தால் மனம் ஒரு நிலைப்படும். பணியில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதில் தொட‌ங்கி, இரவு தூக்கம் வரவைத்துக்கொள்வது வரை பலவற்றுக்கு இப்படிப் பின்னணி ஒலிகளைப் பயன்படுத்தலாம். இத்தகைய ஒலிகளைக் கேட்டு ரசிக்க வழி செய்யும் இணையச் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் ‘ஏ சாஃப்ட் மர்மர்’ செயிலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி மூலம் மழை, இடியோசை, காபி ஷாப் சத்தம், பறவைகள் கீதம் எனப் பலவித ஒலிகளைக் கேட்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். ஒலிகளைக் கலந்து கேட்கும் வசதியும் இருக்கிறது. ஒலிகளுக்கான நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒலிகளைச் சமூக ஊடகம் மூலம் நட்பு வட்டத்தில் பகிரவும் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: >https://play.google.com/store/apps/details?id=com.gabemart.asoftmurmur

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in