Published : 10 Jun 2016 14:21 pm

Updated : 14 Jun 2017 12:54 pm

 

Published : 10 Jun 2016 02:21 PM
Last Updated : 14 Jun 2017 12:54 PM

72 புதிய இமோஜிகள் அறிமுகம்

72

இமோஜி எனப்படும் உருவ எழுத்துக்களை இணைய உரையாடலில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, 72 புதிய இமோஜிகள் அறிமுகமாக உள்ளன.

எழுத்துருக்களைத் தர நிர்ணயம் செய்யும் யூனிகோடு கூட்டமைப்பு தான் இமோஜிகளையும் அங்கீகரிக்கிறது. புதிய இமோஜிகளுக்கான கருத்தாக்கம் இந்த அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டு, பரிசிலிக்கப்பட்ட பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அல்லது நிராகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த அமைப்பு 72 வகையான புதிய இமோஜிகளுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. கெளபாய் தொப்பி, வாடிப்போன முகம், கர்ப்பிணிப் பெண், நடனமாடும் மனிதர் ஆகிய இமோஜிகளுடன் கோமாளி உருவம் மற்றும் செல்பி எடுப்பதைக் குறிக்கும் இமோஜிகளும் அறிமுகமாக உள்ளன.

குத்துச்சண்டை உறை, கொரில்லா, வெள்ளரிக்காய், கேரட், ஸ்கூட்டர் முதல் இடக் குறியீடு என இந்தப் பட்டியல் நீள்கிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


72 புதிய இமோஜிகள் அறிமுகம்இணைய உரையாடல்தர நிர்ணயம்குத்துச்சண்டை உறைகொரில்லா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

யாஹு காலம்!

இணைப்பிதழ்கள்