பொருள் புதுசு: கைரேகை கீ போர்ட்

பொருள் புதுசு: கைரேகை கீ போர்ட்
Updated on
2 min read

மைக்ரோசாஃப்ட் கைரேகையை ரகசிய குறியீடாகக் கொண்ட கீ போர்டை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் தனிநபர் கணினிக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். கணினியை இயக்க மட்டுமல்ல, இணையதளங்களின் ரகசிய குறியீடாகவும், பண பரிமாற்றங்களுக்கும் கைரேகையை பயன்படுத்த முடியும். இந்த கீ போர்டில் கை ரேகைக்கு தனியாக கீ இருக்கும். ஒரு முறை கைரேகையை பதிவு செய்து கொண்டபிறகு இந்த பட்டனை அழுத்தினால், வழக்கமான கீ போர்டை போல இயக்க முடியாது.

பேட்டரி கப்பல்

பேட்டரி வாகனங்களுக்கான முயற்சி தண்ணீரில் செல்லவும் நடைபெற்று வருகிறது. நார்வே நாட்டைச் சேர்ந்த யாரா என்கிற ஆராய்ச்சி நிறுவனம் கேப்டன் தேவைப்படாத எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பலை உருவாக்கி வருகிறது. 2018-ம் ஆண்டில் இதன் செயல்பாடுகள் தொடங்கும். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி கிறிஸ்டிடன் பிரிக்லேண்ட் உருவாக்கிய நிறுவனம்தான் யாரா. ஆண்டுக்கு 40,000 பயணத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இந்த கப்பல் இருக்கும்.

வாகன கண்காணிப்பான்

வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் ஸ்மார்ட் கருவியாக இந்த கார்நாட் வாகன கண்காணிப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாகனத்தில் பொருத்திவிட்டு செயலி மூலம் மொபைலில் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் விலை ரூ.5,199

ஸ்மார்ட் ரிமோட்

குரல் மூலம் டிவி சேனல்களை தேர்ந்தெடுக்கும் வகையிலான ஸ்மார்ட் ரிமோட் இது. இந்த கருவியை வைஃவை மூலம் டிவியுடனும் செட் ஆப் பாக்ஸ் உடனும் இணைத்து டிவிக்கு அருகில் பொருத்திவிட வேண்டும். பின்பு குரல் வழி மூலம் சேனலை தேர்வு செய்யமுடியும். விலை ரூ.1,199

ஸ்மார்ட் கண்ணாடி

நமது சுவற்றில் அழகுக்காக கண்ணாடிகளை மாட்டி வைத்துக் கொள்வோம். அந்த சுவற்றுக் கண்ணாடியில் பேஸ்புக், யூ டியூப், அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்வது என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.39,999

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in