செயலி புதிது: இன்ஸ்டாகிராம் பயண வழிகாட்டி

செயலி புதிது: இன்ஸ்டாகிராம் பயண வழிகாட்டி
Updated on
1 min read

ஒளிப்படப் பகிர்வுச் செயலியான இன்ஸ்டாகிராமைப் பல விதங்களில் பயன்படுத்தலாம். உணவுப் பிரியர்கள் அதில் பகிரப்படும் ரெஸ்டாரண்ட் சார்ந்த படங்கள் மூலம் புதிய உணவைச் சுவைக்க ஏற்ற இடங்களை அடையாளம் காணலாம். அதேபோல ஃபேஷன் பிரியர்கள் புதிய ஆடை அலங்காரத்தை ஒளிப்படங்களாகக் காணலாம். யோகா பிரியர்கள் ஒளிப்படங்களைப் பார்த்து யோகா கற்றுக்கொள்ளலாம். இதே போலவே சுற்றுலாப் பிரியர்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் பயணம் சார்ந்த படங்கள் மூலம் புதிய இடங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படிப் பயணம் சார்ந்த படங்களைப் பார்ப்பதற்காக என்றே தனியே ‘ஷெர்பா’ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோனுக்கான இந்தச் செயலி மூலம், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் சுற்றுலா சார்ந்த படங்களைப் பின்தொடரலாம். உலக நகரங்கள் சார்ந்த ஒளிப்படங்களை வரிசையாகக் காணலாம். உலக வரைபடம் மீதான இடங்களை கிளிக் செய்தும் ஒளிப்படங்களைக் காணலாம். ப‌யணங்களுக்கான புதிய சுவாரசியமான இடங்களைப் பற்றி அறிய இந்தச் செயலி உதவும்.

மேலும் தகவல்களுக்கு: >https://sherpa.guide

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in