Published : 15 Feb 2017 06:45 PM
Last Updated : 15 Feb 2017 06:45 PM

மைக்ரோ சிம் வசதி கொண்ட ஜீப்ரானிக்ஸின் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், ஸ்மார்ட் டைம் 100 என்கின்ற ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட் டைம் 100, 64MB RAM மற்றும் 32MB இன்டெர்னல் மெமரியுடன் வருகிறது, மேலும் ஒரு மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 32GB வரை மெமரியை விரிவுபடுத்திக்கொள்ள முடியும்.

இதன் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி 150 மணிநேரங்கள் செயல்படும் தன்மை கொண்டது, அதேவேளை ப்ளூடூத்தில் 3 மணிநேரங்கள் டாக் டைமையும் வழங்குகிறது. ஸ்மார்ட் டைம் 100 வாட்ச், 3.9 செ.மீ அளவுற்ற தொடுதிரை டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதில் சிம் ஸ்லாட்டும் உள்ளது, அதில் ஒரு மைக்ரோ சிம்மை பொருத்தி இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஒரு தனியாக செயல்படக்கூடிய சாதனமாக பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட் டைம் 100 அழைப்புகளை எளிதாக கையாள வசதியாக ZEB-BH502 என்கின்ற ஒரு ப்ளூடூத் ஹெட்செட்டுடன் ஒன்றிணைந்து வருகிறது. ஸ்மார்ட்ஃபோனை ப்ளூடூத் மூலமாக அழைப்புகளுக்காக ஸ்மார்ட் டைம் 100 உடன் இணைத்திடலாம் அல்லது ஸ்மார்ட் டைம் 100 சிம் கார்டு சப்போர்ட்டுடன் வருவதால் இதனை எந்த ஒரு ஸ்மார்ட்ஃபோனும் இல்லாமல் கூட இதை பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் டைம் 100 ஒரே முறை தொடுவதன் மூலமாக அழைப்புகளை எடுக்கவும் பதிலளிக்கவும் வசதியாக உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்கினைக் கொண்டுள்ளது. இதனால் அடிக்கடி காது அருகில் கொண்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் அழைப்புக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் போதுமான அளவுக்கு சத்தத்துடன் இருக்கும் என ஜீப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில், உள்ளமைக்கப்பட்ட பீடோமீட்டர் உள்ளதால் அணிந்திருப்பவருக்கு அவர் நடந்து தூரத்தையும் மேலும் கலோரியின் அளவினையும் தெரிவிக்கிறது. தொடுதிரை டிஸ்பிளேவுடன், இதன் உள்ளமைக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ பிளோயரைப் பயன்படுத்தி வீடியோக்களைப் பார்க்கலம். இது ஒரு உள்ளமைக்கப்பட்ட கேமராவையும் கொண்டுள்ளது அதனை படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதற்கு பயன்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x