

குறைந்த விலையிலான ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தையில் முதல் முறை ஸ்மார்ட் போன் பயனாளிகளைச் சென்றடைய திட்டமிட்டுள்ளது கூகுள்.
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கடும் போட்டி நிலவும் நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் சவாலான நிலையை எதிர்கொள்ள இருப்பதாக ஐடிசி (International Data Corporation ) ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
சீன சந்தை அடைக்கப்பட்டிருந்தால் கூகுள் இந்தியாவில்தான் அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்கள் பிரிவில் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு ஒன் கூகுளுக்கு முக்கியமானது என்றும் இந்தியாவில் வாங்கக்கூடிய விலையில் ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் திறன் கொண்டது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆண்ட்ராய்டு ஒன் ஏற்கனவே கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் அறிமுகமாக உள்ளது.