தளம் புதிது: தளம் புதிது புத்தகங்களைத் தெரிந்துகொள்ள...

தளம் புதிது: தளம் புதிது புத்தகங்களைத் தெரிந்துகொள்ள...
Updated on
1 min read

புதிதாகப் படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுந‌ர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரசியமான புதிய வழியாக ‘கவர்ஸ்பை’ தளம் அறிமுகமாகியுள்ளது.

‘டம்ப்ளர்’ வலைப்பதிவுச் சேவையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம் வாயிலாகப் புதிய புத்தகங்களை அவற்றின் அட்டைப் பட‌ங்கள் மூலமாக‌ அறிமுகம் செய்துகொள்ளலாம். இந்தப் புத்தகங்கள் எப்படி தேர்வு செய்யப் படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தகப் பிரியர்கள் பொது இடங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள். ஆம், பொதுப் போக்குவரத்து மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் புத்தகப் பிரியர்கள் கையில் வைத்திருக்கும் புத்தகங்களைக் கண்டறிந்து அவற்றின் அட்டைப் படங்கள் இந்தத் தளத்தில் வெளியிடப்படுகின்றன‌.

புத்தக அட்டைப்படம் மற்றும் அவை கண்டெடுக்கப்பட்ட இடம் மட்டுமே இடம்பெறுகிறது. புத்தகம் தொடர்பான விமர்சனக் குறிப்புகள் எல்லாம் கிடையாது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொட‌ங்கி மற்ற நகரங்களுக்கும் விரிவாகி இருக்கிறது. இந்த வரிசையில் டெல்லியும் மும்பையும், நம்ம சென்னையும் இடம்பெறும் வாய்ப்புள்ளதா எனத் தெரியவில்லை.

இணை முகவரி: >http://coverspy.tumblr.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in