

வீட்டிலிருந்து கிளம்பி ரயில், பேருந்து நிலையங்களில் டூ-வீலரை நிறுத்திவிட்டு, இறங்குமிடத்திலிருந்து அலுவலகத்துக்கு ஆட்டோவில் செல்பவர்களுக்கு இந்த மடக்கும் பைக் தீர்வாக இருக்கும். 25 கிமீ வேகத்தில் குறுகிய தொலைவுகளைக் கடக்க பயன்படும்.
உடனடி குளிர்பானம்
குளிர்ச்சி இல்லாத பழரசங்கள் மற்றும் பானங்களை உடனடியாக குளிர்வித்து தருகிறது இந்த குடுவை. கருவியின் மேலிருந்து குளிர்விக்க வேண்டிய பானத்தை ஊற்றிவிட்டு இயக்கினால் உடனடியாக குளிர்ச்சியான பானம் கிடைத்து விடும்.
மன அழுத்தம் குறைய
மன அழுத்தத்தின் அளவை சேமிக்கும் ரிஸ்ட் பாண்ட். இதை கையில் அணிந்து கொண்டால், எந்த நேரத்தில் என்ன மன அழுத்தத்தில் இருந்தோம் என்பதை ஸ்மார்ட்போனில் பதிந்து வைக்கும். இதற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ளலாம்.