செயலி புதிது: பாலிவுட் @ ஃபிளிக்பே

செயலி புதிது: பாலிவுட் @ ஃபிளிக்பே
Updated on
1 min read

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் ‘ஃபிளிக்பே' செயலியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

புதிய படங்களுக்கான முன்னோட்டம், இசை, செய்திகள், வசூல் விவரங்கள், விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்தச் செயலி வழங்குகிறது. இந்தப் பிரிவுகளில் எது தேவையோ அதை கிளிக் செய்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இதில் கண்டறியும் தகவல்களை நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். புதிய திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிவிப்பாகப் பெறும் வசதியும் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: >http://flickbay.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in