200 கோடி பேரை ஈர்த்து ஃபேஸ்புக் சாதனை

200 கோடி பேரை ஈர்த்து ஃபேஸ்புக் சாதனை
Updated on
1 min read

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், தொடர்ந்து இயங்கும் 200 கோடி மாதாந்திர பயனாளிகளை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

100 கோடி பயனாளிகள் என்னும் சாதனையை எட்டிய 5 வருடங்களுக்குள்ளாகவே, 200 கோடி பயனாளிகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை எந்தவொரு நாட்டின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். 7 கண்டங்களின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு.

அக்டோபர் 2012-ல் 100 கோடி பயனாளிகளை எட்டிய ஃபேஸ்புக், தற்போது 200 கோடி பயனர்களைத் தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 31-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 194 கோடி ஃபேஸ்புக் பயனர்கள் இருந்தனர்.

எப்படி சாத்தியமானது?

வளரும் நாடுகளில் ஃபேஸ்புக் பயன்பாட்டை அதிகப்படுத்தும் விதமாக, அந்நிறுவனம் குறைந்த டேட்டாவையே பயன்படுத்தும் 'ஃபேஸ்புக் லைட்' என்னும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இருந்தது. அத்துடன் தொடர்ந்து புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து, அவற்றை மேம்படுத்தியும் வருகிறது. இத்தகைய காரணங்களால், ஃபேஸ்புக் அசாத்திய வளர்ச்சி அடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒப்பீட்டளவில் 2017-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ட்விட்டர் 32.8 கோடி மாதாந்திர பயனாளிகளைக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in