கூகுள் ஹோம்

கூகுள் ஹோம்
Updated on
1 min read

கூகுள் ஹோம்

தகவல் திரட்டியான கூகுள் குரோமின் அடுத்த தலைமுறை தயாரிப்பு கூகுள் ஹோம். குரல் வழியாக நாம் கொடுக்கும் கட்டளைகளை ஏற்று உடனடியாக தகவல்களை திரட்டி குரல் வழியாகவே நமக்கு பதில் சொல்லும்.

‘கூகுள் இன்னைக்கு மழை வருமா’ என்று கேட்டால், அதற்கான தகவல்களை திரட்டி என்ன நிலைமை என்பதை முன்கூட்டியே சொல்லிவிடும். அதற்கேற்ப முன்னேற்பாட்டுடன் வெளியே கிளம்பலாம். நாம் வேறு வேலைகளை செய்து கொண்டே கூகுள் ஹோம்க்கு கட்டளைகளையும் இடலாம்.

பேட்டரி விமானம்

நாசாவின் முக்கிய தயாரிப்பான எக்ஸ் விமான வரிசையில் தற்போது எக்ஸ் 57 விமானத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு செல்லமாக ‘மேக்ஸ்வெல்’ என்றும் பெயரிட்டுள்ளனர். இந்த விமானம் பேட்டரியால் இயங்கும். மிக நீளமான இறக்கைகளோடு 14 எலெக்ட்ரிக் மோட்டார் புரபல்லர்கள் உள்ளன. இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு, வேகம் ஆகிய விஷயங்களில் சிறிய ரக விமானங்களுக்கு ஆகும் செலவுகளில் 40 சதவீதத்தை குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in