டுவிட்டரில் போப்: பின்தொடரும் ஒரு கோடிப் பேர்

டுவிட்டரில் போப்: பின்தொடரும் ஒரு கோடிப் பேர்
Updated on
1 min read

போப் பிரான்ஸிஸின் டுவிட்டர் கணக்கு @pontifex என்ற ஹேண்டிலுடன் செயல்பட்டு வருகிறது. இதனைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இதற்கு போப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர், " தற்போது 1 கோடிக்கும் அதிகமானவர்கள் இப்பக்கத்தைப் பின் தொடர்கிறீர்கள்.

இதற்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காகத் தொடர்ந்து பிரார்த்தியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்ஸிஸ் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி டுவிட்டர் கணக்கைத் தொடங்கினார். ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், போர்சுகீஸ், அரபி, போலிஸ், லத்தீன் என 9 மொழிகளில் இக்கணக்கை உலகெங்குமுள்ள மக்கள் பின்தொடர்கின்றனர்.

அதிகபட்சமாக ஸ்பானிஷ் மொழியில் 40 லட்சம் பேரும், ஆங்கிலத்தில் 30 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். இத்தாலி மொழியில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in