பொருள் புதுசு: அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்

பொருள் புதுசு: அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்
Updated on
2 min read

ஒரே சார்ஜரை கொண்டு அனைத்து வகையான போன்களுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். போன் மாடலுக்கு ஏற்ப சார்ஜிங் பின் மாற்றிக் கொண்டால் போதும். இந்த பின்னும் ஒன்றோடு ஒன்று இணைக்கும் வகையில் இருக்கிறது.

சிறிய ரிமோட் கண்ட்ரோல்

மிகச் சிறிய ரிமோட் கண்ட்ரோல் இது. ஸ்மார்ட்போன் இயர் பிளக்கில் இணைத்துக் கொண்டால் போதும். இதற்கான செயலி மூலம் ஸ்மார்ட்போனிலிருந்தே டிவி, ஏசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன் ஸ்டெடிகேம்

கேமிராவை கையில் பிடித்துக் கொண்டு படம் பிடிப்பதற்கு ஸ்டெடிகேம் என்கிற கருவி பயன்படும். அதையே ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பட்டன்களிலிருந்தே கேமிராவை இயக்கலாம்.

போலாராய்டு பாப் கேமிரா

புகைப்படம் எடுக்கும் கேமிராவிலேயே அந்த புகைப்படங்களை பிரிண்ட் எடுக்கும் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தவர்களுக்கு என்றே பாப் கேமிராவை வடிவமைத்துள்ளது போலராய்டு. இந்த கேமிராவில் படம் எடுத்த உடனேயே 3 அங்குலம் முதல் 4 அங்குலம் அளவிலான போட்டோக்களை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மை தேவைப்படாத ஜின்ங் என்கிற தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

பாலைவன ரோபோ

லாஸ்வேகாஸில் கடந்த வாரம் தொடங்கிய தொழில்நுட்ப கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்துள்ளது இந்த மனித ரோபோ. எலக்ட்ரோ- ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த ரோபோ மனிதர்கள் இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு நடுவில் ஒருவர் அமர்ந்து கொண்டு கைகளால் இயக்கினால் ரோபோ நடக்கத்தொடங்கும். இரண்டு மணி நேரம் வரை ஓடும். பாலைவனங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றவை என்று குறிப்பிட்டுள்ளனர். லித்தியம் பாட்டரியால் இயங்கக்கூடியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in