

ஸோலோவீல் நிறுவனம் வடிவமைத்துள்ள ஒரு சக்கர வாகனம். சக்கரத்தின் இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 கிமீ வேகத்தில் 12 கிலோ மீட்டருக்கு பயணம் செய்யலாம்.
வேலைக்கு ரோபோ
ஜப்பானில் அனைத்து இடங்களிலும் ரோபோ பயன்படுத்துவதற்கான ஆய்வுகளில் உள்ளனர். அந்த வகையில் பானசோனிக் நிறுவனம் தனது ஹாஸ்பி ரோபோவை ஜப்பானில் நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு நிறுவியுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப அருகிலுள்ள ஓட்டல் உள்ளிட்ட விவரங்களை ஹாஸ்பி தருகிறது. ஏற்கெனவே இந்த ரோபோ மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளதால் ரோபோ சேவைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
வேவ் ஒன் இன் ஏர்
மோட்டோரோலா நிறுவனம் வேவ் ஒன் இன் ஏர் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது. இசைக் கேட்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போனை மழையில் கூட பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்படுத்தலாம். விலை 149.99 யூரோ. மோட்டோரோலா நேரடியாக விற்பனை செய்கிறது. இது ஆப்பிள் ஏர்பாடைவிட மிக குறைந்த விலை என்பதால் இசை பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
பீங்கான் குடுவை
அதிக நேரம் வெப்பத்தை தக்கவைப்பதுடன், சுவையும் மாறாது என்பதால்தான் சூடான பானங்கள் பீங்கான் கோப்பையில் பரிமாறப்படுகின்றன. இதற்காகவே பீங்கான் பிளாஸ்கை வடிவமைத்துள்ளது `பின்க்’ என்கிற நிறுவனம்.
கறை படாத சட்டை
கறை படியாத பருத்தி சட்டையை உருவாக்கியுள்ளது இண்டூ என்கிற நிறுவனம். வியர்வை நாற்றம் தங்காது, நல்ல காற்றோட்டம், விரைவில் உலரும் தன்மையுடன் இந்த சட்டை இருக்கும். இரண்டு பக்கமும் பயன்படுத்தலாம். இயந்திரத்திலும் துவைக்கலாம்.