Last Updated : 05 May, 2017 11:55 AM

 

Published : 05 May 2017 11:55 AM
Last Updated : 05 May 2017 11:55 AM

தளம் புதிது: திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்

ஹாலிவுட் பட ரசிகர்கள் அடுத்ததாக என்ன படம் பார்க்கலாம் என்பதை சுவாரசியமான முறையில் பரிந்துரைக்கும் இணையதளம் முவிக்ஸ். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த படத்தை இந்தத் தளத்தில் சமர்ப்பித்தால் அதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்குப் பிடிக்கக்கூடிய வேறு திரைப்படங்களைப் பரிந்துரைக்கிறது.

ரசிகர்கள் குறிப்பிடும் திரைப்படங்களின் அடிப்படையில் அவர்களுக்குப் பிடிக்கக்கூடிய திரைப்படங்களை முன்வைக்கும் பரிந்துரைச் சேவையை வழங்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. முவிக்ஸ் தன் எளிமையான தன்மையால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது.

பொதுவாகப் பரிந்துரைத் தளங்களில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பல படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், முவிக்ஸ் சேவையைப் பயன்படுத்த உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தத் தளத்தில் நுழைந்து, மனதில் உள்ள திரைப்படத்தைக் குறிப்பிட்டால் போதும், பார்க்க வேண்டிய படங்களைப் பரிந்துரை செய்கிறது. நிறைய படங்களை சமர்ப்பித்தால் பரிந்துரை இன்னும் சிறப்பாக அமையலாம்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பம் மூலம் திரைப்படங்களின் பல்வேறு அம்சங்களை உடனடித்தன்மையுடன் பரிசீலித்து இந்தச் சேவை செயல்படுவதாக முவிக்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த முறையை ஆழ் கற்றல் எனக் குறிப்பிடுகிறது.

மிக எளிமையான வடிவமைப்பைக் கொண்ட இந்த இணையதளம் திரைப்பட ரசிர்களை நிச்சயம் கவரும். அதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களையும் இந்தத் தளம் கவரும்.

இணையதள முகவரி: >https://movix.ai/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x