

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசுவதாக இருந்தாலும் சரி, நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ‘ஸ்பீச்இன்மினிட்ஸ்.காம்' தளம் உதவுகிறது. எழுதி வைத்திருக்கும் உரையில் உள்ள வார்த்தைகளைத் தெரிவித்தால் அதைப் பேச எவ்வளவு நேரம் ஆகும் எனக் கணக்கிட்டுச் சொல்கிறது.
சராசரியாக 130 வார்த்தைகளைப் பேச ஒரு நிமிடம் ஆகலாம் எனும் கணக்கின் அடிப்படையில் இந்தத் தளம் செயல்படுகிறது. துல்லியமான கணிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் உத்தேசமான இந்தக் கணிப்பு நிச்சயம் பேச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். உரை நிகழ்த்த என்றில்லை, அலுவலகக் கூட்டத்தில் பேச, காட்சி விளக்கம் செய்யத் தயாராகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணையதள முகவரி: >http://www.speechinminutes.com/