வீடியோ ஸ்டான்ட்

வீடியோ ஸ்டான்ட்
Updated on
1 min read

வீடியோ ஸ்டான்ட்

ஸ்மார்ட்போனில் வீடியோ கால் செய்ய, வீடியோ எடுக்க போனை தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை. இந்த ‘பேட்பாட் டி1’ ஸ்டான்டில் போனை பொருத்தி விட்டால் போதும். அதுவாகவே நீங்கள் செல்லும் இடத்துக்கெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும்.

பழரச கருவி

எல்லா வகையான பழங்களைக் கொண்டும் செறிவூட்டப்பட்ட பழச்சாறு தயாரிப்பதற்கான கையடக்க கருவி. பழங்களை ஈஸ்ட்டுடன் இரண்டு மூன்று நாட்கள் இந்த ‘அல்சிமா’ கருவிக்குள் வைத்தால் பழரசம் தயாராகிவிடும்.

உடற்பயிற்சி கருவி

இரவு நேரங்களில் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உபயோகமான எல்இடி கருவி. கைகளில் கட்டிக் கொண்டால் இரவில் ஒளிரும் விதமாக இருக்கும். இதிலுள்ள சென்சார்கள் நமது உடல்நிலை குறித்த தகவல்களையும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி விடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in