16 கிராம் எடையில் ஜீப்ரானிக்ஸின் புதிய ஹெட்ஸெட்

16 கிராம் எடையில் ஜீப்ரானிக்ஸின் புதிய ஹெட்ஸெட்
Updated on
1 min read

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், புதிய ப்ளூடூத் இயர்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. ZEB-BH330 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்ஃபோன் மிகவும் எடை குறைவான ப்ளூடூத் ஹெட்செட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளதும்.

இந்த ஹெட்செட்டில் சத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது. வெறும் 16 கிராம் எடையில், காதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய வடிவமைப்பு பயன்பாட்டுக்கு எளியதாக இருக்கும். ப்ளூடூத் 4.0 ஒயர்லெஸ் தொழில்நுட்பம் கொண்ட இதில் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி, 5 மணிநேரம் வரை ஆடியோ மற்றும் அழைப்புகளை கையாளக் கூடியது.

ZEB-BH330 சில்லரை மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 வருட உத்திரவாதத்துடன் கிடைக்கிறது. இந்த இயர்ஃபோனின் விலை ரூ. 1599

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in