Last Updated : 20 Jun, 2015 05:15 PM

 

Published : 20 Jun 2015 05:15 PM
Last Updated : 20 Jun 2015 05:15 PM

நகரங்களில் இரட்டை மடங்காகிய சமூக ஊடகங்களின் பயன்பாடு

முதன்மையான நான்கு மெட்ரோ நகரங்களில் வசிக்கும் நகர்ப்புற மக்களே அதிகளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது ஐஏஎம்ஏஐ- ஐஎம்ஆர்ஐயின் ஆய்வு.

இதன் ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:

கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் வசிப்பவர்களில், இணையத்தைக் கையாளுபவர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்துவதற்காகவே இணைய வசதி கொண்டிருக்கும் இவர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 50 லட்சம்.

மக்கள் இணையத்தை அணுகுவதற்கான முக்கியக் காரணங்களில் சமூக ஊடகங்களின் பயன்பாடும் முக்கியமான ஒன்றாகும். சொல்லப்போனால், இணையத்தை நோக்கி ஈர்க்கப்படுபவர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்காகவே வருகின்றனர்.

ஏப்ரல் 2015-ல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 143 மில்லியன் பயனாளிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதில் 118 மில்லியன் பயனாளிகள் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள். அதே நேரம், சென்ற வருடம் 12 மில்லியனாய் இருந்த கிராப்புற பயனாளிகளின் எண்ணிக்கை, 100 மடங்கு அதிகரித்து 25 மில்லியனாய் அதிகரித்திருக்கிறது.

சமூக ஊடகங்களிலேயே, ஃபேஸ்புக்தான் 96 சதவீத நகர்ப்புற பயனர்களோடு முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து கூகிள் ப்ளஸ் (61 சதவீதம்), ட்விட்டர் (43 சதவீதம்) மற்றும் லிங்க்ட்-இன் (24 சதவீதம்) ஆகியவை இருக்கின்றன. கல்லூரி மாணவர்களே (34 சதவீதம்) அதிகளவிலான பயனாளிகளாக இருக்க, இளைஞர்கள் 27 சதவீதத்தினராய் இருக்கின்றனர். பள்ளிக் குழந்தைகளில் 12 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நகரவாசிகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை 60 சதவீத அளவுக்கு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களுமே ஆக்கிரமிக்கின்றனர்.

சமூக வலைதள பயனர்கள், இணையப் பயன்பாட்டுக்கு ஸ்மார்ட் போன்களையும், டேப்லட்டுகளையுமே அதிகளவில் பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகமாகி வருகிறது.

மூன்றில் இரண்டு மடங்கு பயனாளிகள் தங்கள் செல்பேசிகளிலேயே, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைத் தளங்களில் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளில் பாதிப்பேர் தங்கள் கணக்குகளில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களாய் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x