தளம் புதிது: ஆயிரம் இணையதளங்கள்

தளம் புதிது: ஆயிரம் இணையதளங்கள்
Updated on
1 min read

புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களைத் தொகுத்துத் தந்து வியக்கவைக்கிறது. இணையத்திலிருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் மட்டும் வரிசையாக இடம்பெற்றுள்ளன. கீழ்ப்பகுதியில் மீண்டும் தளங்களின் லோகோக்கள் அணிவகுக்கின்றன.

எந்த இணைப்பை கிளிக் செய்தாலும் அந்த இணையதளத்துக்கான பக்கம் அருகே திறக்கப்படுகிறது. மொத்தம் ஆயிரம் இணையதளங்கள் இப்படி முகப்பு பக்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பிரபலமான யூடியூப், அமேசான், கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து முன்னணித் தளங்களையும் பார்க்க முடிகிறது.

இணையதள முகவரி: >http://fulck.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in