நான்காவது பயர்பாக்ஸ் போன்

நான்காவது பயர்பாக்ஸ் போன்
Updated on
1 min read

ஸ்பைஸ், இண்டெக்ஸ் மற்றும் அல்காடெல் என பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிறுவனங்களின் வரிசையில் ஜென் மொபைலும் சேர உள்ளது. மொசில்லாவுடன் இணைந்து ஜென் மொபைல் நிறுவனமும் குறைந்த விலையிலான பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் நான்காவது பயர்பாக்ஸ் போனாக இருக்கும். ஸ்மார்ட் போன் அனுபவத்தை முதலில் பெற விரும்புகிறவர்களுக்கு பயர்பாக்ஸ் போன்ற குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் உதவும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான இந்தியப் பயனாளிகள் விலையை முக்கியமாகக் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மொசில்லா மேலும் பல கூட்டுத் திட்டங்களுடன் பயர்பாக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டை விரிவாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் சந்தையை மேம்படுத்தும் வகையில் இபே இந்தியா, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயலிகளைக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in