செயலி புதிது: வாசிப்பைப் பகிர உதவும் செயலி

செயலி புதிது: வாசிப்பைப் பகிர உதவும் செயலி
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் யுகத்தில், புத்தகப் பிரியர்கள் விரும்பி வாசிக்கும் புத்தகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் வகையில் ‘புக்லைட்ஸ்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி மூலம் புத்தகப் பிரியர்கள் தாங்கள் வாசிக்கும் மின்புத்தகங்களில், மிகவும் ரசித்த பகுதியை அடிக்கோடிட்டு அதன் திரைத் தோற்றத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை வாசித்ததும், அதில் நம்மைக் கவர்ந்த பகுதிகளை மனதுக்குள் அசைபோட்டுவிட்டுப் பின்னர் மறந்து விடுகிறோம். ஆனால் இதற்குப் பதிலாகப் புத்தகத்தில் ரசித்தப் பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், வாசிப்பின் பயனைப் பரவலாகப் பெறலாம் எனும் அடிப்படையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சேவைகளிலும் புத்தகத்தின் சிறந்த பகுதிகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். புத்தகப் புழுக்கள் தங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்வதற்கான வழியாக இருக்கும் என்பதோடு, புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாகவும் இந்தப் பகிர்தல் அமையலாம்.

மேலும் விவரங்களுக்கு: >http://booklights.us/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in