

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் ரசிகர்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சச்சினும் சமீபத்தில்தான் டிஜிட்டல் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார்.
இதற்காக 100 எம்பி எனும் பெயரிலான செயலியை சச்சின் சமீபத்தில் அறிமுகம் செய்தார். இந்தச் செயலி மூலம் சச்சின் தொடர்பான சிறப்புத் தகவல்களை அணுகலாம். சச்சினைத் தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது.
சச்சின் தொடர்பான தங்கள் கருத்துகளையும் ரசிகர்கள் பகிர்ந்துகொள்ளலாம். சச்சினின் சூப்பர் ரசிகராகப் பிரத்யேக தகவல்கள், வீடியோக்கள் பெறலாம். சச்சின் பேஸ்புக் பக்கம், டிவிட்டர் பக்கம் ஆகிய தகவல்களையும் இந்தச் செயலியிலேயே பெறலாம்.
மேலும், ஐபிஎல் போட்டி விவரங்களையும் அணுகலாம். வீரர்கள் தொடர்பான சரி பார்க்கப்பட்ட செய்தி களையும் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு: >http://bit.ly/2pVGjvi