

உலகத்தின் எந்த மூலையிலும் இணைய தொடர்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், புராஜெக்ட் லூன் என்கிற பலூனை பறக்க விட உள்ளது. இதற்கு செல்லப் பெயராக ‘பெய்லி ஜீன்’ என்றும் பெயரிட்டுள்ளது.
ரோபோ தேனீ
தாவரங்களின் அயல் மகரந்த சேர்க்கை தேனீக்களை நம்பிதான் உள்ளது. தற்போது தேனீக்கள் செய்யும் வேலையையே செயற்கை முறையில் செய்ய ரோபோவை உருவாக்கியுள்ளது ஒரு அமெரிக்கா கல்லூரி. தேனீ, பூக்களில் தேனை உறிஞ்சுவது போலவே இந்த ரோபோ மகரந்தங்களை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு மாற்றும் வேலையையும் செய்கிறது. தற்போது கல்வி பயிற்சிக்காக சோதனையில் உள்ள இந்த ரோபோ விரைவில் வர்த்தக முறையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொம்மை பிரச்சினை
இங்கிலாந்தின் ஜெனிசிஸ் நிறுவனத்தின் பொம்மைகளில் பொருத்தப் பட்டுள்ள ரகசிய கேமிரா மற்றும் மைக்ரோ போன்களால் மக்களின் அந்தரங்கம் பாதிக்கப்படுவதாகவும், குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகிறது என்றும் பெற்றோர்கள் இந்த பொம்மைகளை வாங்கிக் கொடுக்க வேண்டாம் என ஜெர்மனி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த பொம்மை, ‘மை பிரண்ட் கைலா’ என்கிற செயலியில் இணைக்கும் வகையில் இருக்கிறது.
பாதுகாப்பு பட்டன்
ஓன்போன் என்கிற நிறுவனம் எஸ்ஓஎஸ் பாதுகாப்புக்கு என்று சிறிய பட்டன் போன்ற கருவியை தயாரித்துள்ளது. இதில் உள்ள பட்டன் அழுத்தப்பட்டால், உதவி தேவைப்படுபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை ஸ்மார்ட்போன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
நோக்கியா 3310
ஸ்மார்ட்போன் சந்தையில், ‘நோக்கியா 6’ மாடலுடன் மீண்டும் இறங்கியுள்ள நிலையில், அதன் 3310 போன்ற பழைய மாடல் போன்களை மக்கள் இப்போதும் விரும்புகிறார்கள் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.