தளம் புதிது: இணையத்தில் ஒரு விநாடி

தளம் புதிது: இணையத்தில் ஒரு விநாடி
Updated on
1 min read

இணையத்தில் ஒரு விநாடியில் என்ன எல்லாம் நிகழ்கின்றன தெரியுமா? டிவிட்டர் பயனாளிகள் 6,000 குறும்பதிவுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1000 ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. பேஸ்புக்கில் 52,083 லைக்குகள் விழுகின்றன. வீடியோ பகிர்வு தளமான யூடியூபில் 1,24,900 வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன.

இணையத்தின் முகப்புப் பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட்டில் 289 வாக்குகள் செலுத்தப்பட்டு 23 கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. முன்னணி தேடியந்திரமான கூகுளில் 54,000 தேடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. 2,501.825 மெயில்கள் அனுப்பப்படுகின்றன. 2,176 ஸ்கைப் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இணையப் பயன்பாடு பற்றிய இது போன்ற வியக்கவைக்கும் தகவல்களை இண்டெர்நெட் லைவ் ஸ்டேட்ஸ் (www.internetlivestats.com) இணையதளம் அளிக்கிறது. ஒரு நொடியில் நிகழும் புள்ளிவிவரங்கள் என்பதால் இந்தத் தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்தத் தகவல்கள் தவிர இணையத்தின் வளர்ச்சி மற்றும் இணையப் போக்குகள் பற்றிய தகவல்களையும் இந்தத் தளத்தில் பார்க்கலாம். உதாரணத்துக்கு 1999-ல் கூகுளுக்கு 50 மில்லியன் இணையப் பக்கங்களைப் பட்டியலிட ஒரு மாதம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது கூகுள் ஒரு நிமிடத்துக்குள் இதைச் செய்துவிடும். அது மட்டும் அல்ல 5 ஆண்டுகளுக்கு முன் உலக மக்கள் தொகையில் 31.8 சதவீதம் பேர்தான் இணையத்தை பயன்படுத்தினார்கள். இப்போது இது 46.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in